காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் கிராம சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கருநிலம் கிராமத்தில் எம்.ஜி.என்.ஆர்.வி.இ.ஜி.எஸ். திட்டத்தில் 2014-ம் ஆண்டு ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்தில் கிராம சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது.



 


" alt="" aria-hidden="true" />

இந்தநிலையில், கட்டிடம் கட்டப்பட்ட நாளில் இருந்து இதுநாள் வரை அந்த கிராம சேவை மையத்தில் எந்தவிதமான கூட்டங்களும் நடைபெறாமல் செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியை ஒட்டி கிராம சேவை மையம் அமைந் துள்ள காரணத்தினால் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

இந்த கிராம சேவை மையத்தில் தினந்தோறும் இரவு நேரத்தில் மதுபிரியர்கள் சிலர் மது அருந்தி வருகின்றனர். அப்படி மது அருந்திய பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் இந்த கிராம சேவை மையம் கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. எனவே இந்த கிராம சேவை மையத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் இந்த கிராம சேவை மையத்தில் நடை பெறும் சமூகவிரோத செயல்களை தடுக்க போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Popular posts
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
கொடுங்கையூரில் தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி மற்றும் தமிழகத்தை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி பதாகைகள்,பலூன் பறக்கும்விடும் நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர்,எம்.ஜி.ராஜாமணி பொதுச்செயலாளர் இட்லி இனியவன் தலைமையில், சிறப்பு அழைப்பளர்கள்,திருவொற்றியூர் காலடிப்பேட்டை செல்வி கிளினிக் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜக்குமார்,கிளினிக்கின் பிஆர்ஒ எ.எம் கே.இரவிக்குமார்,மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
Image
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்காலிகமாக போடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மற்றும் அம்மா உணவகம் ஆய்வு:
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
Image