திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல் ; 8 பேர் மீது வழக்கு

" alt="" aria-hidden="true" />

திருவள்ளூர், 

 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பந்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பசுபதி (வயது 25). நேற்று முன்தினம் பசுபதி தனது நண்பர்களான ஞானமணி, கோகுல், அரவிந்த் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார்.


 


அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன், ராம்குமார், ராஜே‌‌ஷ், சுகுமார் ஆகிய 4 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு பசுபதியையும், அவரது நண்பர்களையும் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளனர்.

 

8 பேர் மீது வழக்கு

 

பதிலுக்கு பசுபதி தனது நண்பர்களான ஞானமணி, கோகுல், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து ஜனார்த்தனன், ராம்குமார், ராஜே‌‌ஷ், சுகுமார் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

 

இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக மப்பேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Popular posts
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
கொடுங்கையூரில் தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி மற்றும் தமிழகத்தை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி பதாகைகள்,பலூன் பறக்கும்விடும் நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர்,எம்.ஜி.ராஜாமணி பொதுச்செயலாளர் இட்லி இனியவன் தலைமையில், சிறப்பு அழைப்பளர்கள்,திருவொற்றியூர் காலடிப்பேட்டை செல்வி கிளினிக் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜக்குமார்,கிளினிக்கின் பிஆர்ஒ எ.எம் கே.இரவிக்குமார்,மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
Image
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்காலிகமாக போடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மற்றும் அம்மா உணவகம் ஆய்வு:
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
Image