மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார் 7 பேர் காயமின்றி உயிர் தப்பினார்கள்

" alt="" aria-hidden="true" />


மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுநெம்மேலி குப்பம் அருகில் கார் சென்றபோது இடது பக்கத்தில் உள்ள மீனவர் கணபதி (வயது 65) என்பவர் வீட்டுக்குள் கார் கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது.



முன்னதாக அதிவேகத்தில் வந்த அந்த கார் வீட்டின் முகப்பில் உள்ள மின் கம்பம், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அந்த வீட்டு வாசலில் புகுந்தது.

இதில் காரின் ஒரு பகுதியும், மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தன. அப்போது வீட்டு வாசல் ஓரத்தில் படுத்திருந்த 3 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

முன்னதாக மின் கம்பத்தில் அந்த கார் மோதி, வீட்டுக்குள் புகுந்ததால் அப்போது மின் கம்பிகளில் சேதம் ஏற்பட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பி அறுந்து விழுந்து இருந்திருந்தாலும் மின்சாரம் தாக்கி உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கும்.

அந்த காரில் வந்த 4 வாலிபர்களும் காயமின்றி உயிர் தப்பினார்கள். அதிவேகத்தில் கார் வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், கார் டிரைவரின் கவனக்குறைவே இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்று அந்த பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Popular posts
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
கொடுங்கையூரில் தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி மற்றும் தமிழகத்தை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி பதாகைகள்,பலூன் பறக்கும்விடும் நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர்,எம்.ஜி.ராஜாமணி பொதுச்செயலாளர் இட்லி இனியவன் தலைமையில், சிறப்பு அழைப்பளர்கள்,திருவொற்றியூர் காலடிப்பேட்டை செல்வி கிளினிக் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜக்குமார்,கிளினிக்கின் பிஆர்ஒ எ.எம் கே.இரவிக்குமார்,மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
Image
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்காலிகமாக போடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மற்றும் அம்மா உணவகம் ஆய்வு:
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
Image